294. வரம் தந்த பாபாவுக்கு பதமான லாலி !
தலைப்பு என்னுடையது. மேட்டர் கி.அ.அ. அனானியுடையது !
அனானி நண்பர் சூப்பர் ·பார்மில் இருக்கிறார் போல் உள்ளது :) இன்னும் 2 மேட்டர்களை மெயிலில் அனுப்பித் தாக்கியுள்ளார் ;) அவற்றைப் பிறகு பதிகிறேன்.
எப்போதும் போல், இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!! என்சாய் !
******************
சப்பை மேட்டருக்கு இத்தனை சப்பைக்கட்டா ?
அல்லாரும் பேசி முடுச்சுட்டாங்க ..அதனால நாம ஆரம்பிக்கிறோம் அதாங்க முதல்வர் மனைவி தயாளு அம்மாள் சாய்பாபா கால்ல விழுந்த மேட்டரு.
எல்லாத்துக்கும் மொதல்ல ஒண்ணு சொல்லிப்போடணும் .....இதுல தப்பொண்ணும் இல்லீங்க...அது அவங்க இஷ்டம்
ஆனா வயசான காலத்துல ஏன் முதல்வர் இப்படி சப்பை கட்டு கட்டிக்கிட்டு இருக்காரு அப்படீன்னு ஒரு கேள்வியும் வருதுங்க
சப்பை கட்டு பார்ட்----1
அவர் நமக்கு நாமே திட்டத்தில் குடுக்குற கேள்வி பதில் அறிக்கையில் சொல்ரத கேளுங்க
" ஏன் மனைவி பக்தி மேலிட்டு காலில் விழவில்லை.வயதில் பெரியவர்கள் வந்தால் அவர்களை வணங்குவது என்ற மரியாதை காட்டும் மரபுதானே தவிர வேறில்லை "
அட்ரா சக்கைன்னானாம்...அப்பிடியே அவரோட இளவல் திராவிட தலைவர் வீரமணி சொல்லியிருக்கிறதை கேளுங்க
" தயாளு அம்மையார் பாபாவிடம் ஆசி வாங்கியதிலும் எங்களுக்கு உடன்பாடில்லை.ஏனென்றால் காலில் விழும் கலாசாரத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. "
பகுத்தறிவு விஷயமா வீரமணி சொல்றதை முதல்வர் ஏன் ஏத்துக்கணும் அல்லது கேட்கணும் அப்படீன்னு கேள்வி வர்ரது ஞாயம்தான்.
அதுக்கும் முதல்வரே "தெலுங்கு-கங்கை திட்டத்திற்காக ரூ.200 கோடி பாபா செலவழித்துள்ளார்.அதற்கு நன்றி சொல்லும் வகையில் நாங்கு முதல்வர்கள் பங்கேற்கும் விழாவில் நான் கலந்தி கொள்ளட்டுமா என்று வீரமணியிடம் கேட்டுக் கொண்டுதான் கலந்து கொண்டேன் " அப்படின்னு வீரமணியை " பகுத்தறிவு ரெபரன்ஸ் ஆப் தி வர்ல்ட்" ரேன்சுக்கு வச்சு பேசுனதுனால கேட்டோம். அம்புட்டுதான்
சப்பை கட்டு பார்ட்---2
மேலும் முதல்வர் சொன்னது
" 1948 ஆம் ஆண்டு எனக்கும் தயாளுவுக்கும் திருமணம் நடக்கும் போதே "திருமாகாளம்" கிராமத்தில் அந்தக் குடும்பத்தினர் தீவிர திராவிட கழகத்தில் இருந்தனர்.1938ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவர்தான் தயாளுவின் பாட்டி ராஜாமணியம்மாள்"
இதுலேர்ந்து என்ன சொல்ல வர்ராரு? அவங்க குடும்பமே திராவிட பாரம்பரியம் உள்ளது..அதுனால தயாளு அம்மாளும் அந்த பாரம்பரியம்தான் அதுனால அவங்க காலில் விழுந்தது பக்தியினால் இல்லை... மரியாதை நிமித்தமே அப்படீன்னா ?
ஆனா வீரமணி அய்யா சொல்ராருங்க " இருந்தாலும் தயாளு அம்மாள் கடவுள் நம்பிக்கையாளர்" ன்னுட்டு.
அட...அவுங்க பக்தியாளரா இல்லை பகுத்தறிவாளரா அல்லது பக்தி மிகுந்த பகுத்தறிவாளரா அப்படீன்னு சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க.
ஏன்னா இதை வச்சு தப்பு & தப்பில்லைன்னு "ஜோ"ரா "ஜல்லியடிச்சு "விடாது" க "லக்கி"ய கூட்டத்துக்கு கொஞ்சம் தெளிவு வருமுல்ல.
*******************
*** 294 ***
7 மறுமொழிகள்:
Test comment !
Dondu's comment for my first posting at
http://balaji_ammu.blogspot.com/2004/07/first-posting.html
being reproduced here :)
வலைப்பூவுக்கு வருக வருக என்று அழைக்கிறேன். இங்கு டோண்டு ராகவன் என்ற ஆபத்தான பதிவர் இருக்கிறார். அவரைத் தவிர்க்கவும். அவருக்கு யாரோ இன்ஸ்பிரேஷன் என்று போட்டிருந்தார். அவரையும் தவிர்க்கவும். அவர் பெயரை மறந்து விட்டேன். எனக்கு ஞாபக சக்தியே கிடையாது.
Comment by dondu(#11168674346665545885) at 7:55 AM, February 06, 2007
Test comment again ! ;-))
அட...அவுங்க பக்தியாளரா இல்லை பகுத்தறிவாளரா அல்லது பக்தி மிகுந்த பகுத்தறிவாளரா அப்படீன்னு சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க.
ha..ha...ha
Good uLkuththu
/சாய்பாபா காலில் என் மனைவி விழுந்தது பக்தியால் அல்ல; பெரியவர்களுக்கு மரியாதை காட்டும் மரபுதான் - முதல்வர் கருணாநிதி//
அட்றா சக்கை! இந்த மரியாதையைச் செய்யும் பாரம்பரியத்தை மறுப்பது தானுங்க பகுத்தறிவாச் சொல்லிக்கிட்டதுங்க!
ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்ப்பா கண்ணைக்கட்டுதே!
எப்படி கருணாநிதியால் மட்டும் இப்படி?
100ரூபாய் மஞ்சள் துண்டுக்கே துண்டு துண்டா 108 காரணம் இதுவரை சொல்லியாச்சு (ஸ்டாக்ல இன்னும் 108 இருக்கு:-))
மனைவி தயாளு அம்மா சாய்பாபா காலில் விழுந்ததுக்காக 1008 காரணம்
சொல்ல வேண்டிய கடமை இருக்கே!
வாயைத் திறந்து ஏன்னு கருணாநிதியைக் கேட்டா பின்ன 1008 காரணம் கேட்டு அவதிப்படணுமேன்னு பயத்தில் ஏன்னு கேட்கவே இல்லை என்றாலும் வாழைமட்டைத் தமிழன் 1008க்கு பிள்ளையார் சுழி போட்ட இந்தக் காரணத்தைச் சோற்றால் அடித்த பிண்டமாக இருந்து கேட்டாக வேண்டிய கட்டாயம் :-))
கருணாநிதி குடும்பம் பகுத்தறிவானதுதான் போதும் விட்டுடுங்கோன்னு சாதாரண-சாமானியத் தமிழன் அலறுவது கேட்கிறதா:-))
//கருணாநிதி குடும்பம் பகுத்தறிவானதுதான் போதும் விட்டுடுங்கோன்னு சாதாரண-சாமானியத் தமிழன் அலறுவது கேட்கிறதா:-))
//
நல்லா கேக்குது, ஆனா என்ன பண்ண முடியும் :)
//ஏன்னா இதை வச்சு தப்பு & தப்பில்லைன்னு "ஜோ"ரா "ஜல்லியடிச்சு "விடாது" க "லக்கி"ய கூட்டத்துக்கு கொஞ்சம் தெளிவு வருமுல்ல.//
;-))))))))))))))))))
Post a Comment